undefined

நாளை மண்டல பூஜை... சபரிமலையில்  ஐயப்பனைக் காண குவிந்த பக்தர்கள்....!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை டிசம்பர் 27ம் தேதி புதன்கிழமை  மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.  இதன் தொடக்க நிகழ்வாக ஐயப்பனுக்கு இன்று  தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.இந்நிகழ்வில்  64000  பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தேவசம்போர்டு ஏற்கனவே அறிவித்துள்ளது.  

சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள்   10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 18ம்படி ஏறும் வேகம் குறைந்ததால் இந்த வருடம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.   இதனால் எருமேலி, பாலா, வைக்கம், பொன்குன்னம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  திருவிதாங்கூர் மன்னர்  1973ல்  சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை சன்னிதானத்தை வந்தடையும்.  தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.  

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில்  நாளைய தினம் மண்டல பூஜை  நடைபெறுவதை ஒட்டி   70000  பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.   மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.  பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் டிசம்பர்  30ம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனத்திற்காக  ஜனவரி 20ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!