undefined

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

 

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமழை பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. மின்சாரம் , குடிநீர், மொபைல் நெட்வொர்க் இன்றி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெல்ல மெல்ல படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது வங்கக்கடலில் மீண்டும் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

 

இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு மிகுந்த கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், தட்டார்மடம், ஸ்ரீவைகுண்டம் வாலத்தூர் பகுதிகளில் நேற்று இரவு  முதல்  தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது

 

. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் இந்த மழை மிக கனமழையாக மாறியுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.   வீட்டுக்குள் மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு  கருதி நாளை டிசம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!