நாளை நிச்சயதார்த்தம்... சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி இளைஞர் பலி... பெரும் சோகம்!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் மத்துலபள்ளி கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் பிரசாத் . இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள சாலை ஒன்றைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பிரசாத் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த மர்மக் காரைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த வாலிபர் உயிரிழந்த இந்தச் சம்பவம் மத்துலபள்ளி கிராம மக்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!