அதிகனமழை... நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை... பத்திரம் மக்களே!
இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்.
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
கடந்த மே மாதம் இறுதியில் நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கியது. அதி கனமழை வரை பெய்ததால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஜூன் 14ம் தேதி மற்றும் ஜூன் 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழை வரையிலும் பெய்யும் என ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!