கவியருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கவியருவியில் (குரங்கு நீர்வீழ்ச்சி), நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் பெய்யும் இந்தத் தொடர் மழையின் காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்க வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. மழை குறைந்து, நீர்வரத்து சீரான நிலைக்குத் திரும்பிய பிறகு, சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆழியார் அணை மற்றும் கவியருவிக்குக் கோவை, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தத் தடையின் காரணமாகச் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தாலும், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!