இந்தப் பக்கம் போகாதீங்க... சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வரும் நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை உட்புற சாலை டிசம்பர் 31-ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை முழுவதும் மூடப்படும்.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!