undefined

  கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்!

 
 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11-ம் தேதி நடைபெற உள்ள டிரையத்லான் விளையாட்டு போட்டியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார். நாளை இரவு 11 மணி முதல் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் சென்னை–புதுச்சேரி மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் சந்திப்பிலிருந்து சூளேரிக்காடு (நெம்மேலி) வரை முழுவதுமாக மூடப்படும். இதே சாலையில் இருவழி பாதையாக போட்டி நடைபெற உள்ளதால், கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள், பூஞ்சேரி ஆலத்தூர் பைபாஸ் வழியாக OMR சாலையில் செல்ல வேண்டும்.

ஆலத்தூர் பைபாஸ்–பேரூர் சந்திப்பு வழியாக ECR-ஐ அணுகும் இணைப்பு சாலையும் மூடப்படும். இலகுரக வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை பூஞ்சேரி–கோவளம் வழியாக அனுமதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!