பிரதமர் மோடி வருகை... சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சென்னை விமானநிலையத்தில் இருந்து வரும் பிரதமர் அங்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்துக்கு செல்லவுள்ளார். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பி மாலை தில்லி புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவல்துறையினர் மாற்று வழித்தடங்களை அறிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக மற்றும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கீழ்கண்ட மாற்று வழித்தடங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:
சென்னை → திண்டிவனம் : வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் மூலம் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.
மற்ற வழிகள் : வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனூர், கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் செல்லலாம். திருச்சி → சென்னை உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு–செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புற வழிச்சாலை வழியாக செல்லலாம்.
அதேபோல், விழுப்புரம்–சென்னை,திருப்பெரும்புதூர்–சென்னை, திண்டிவனம்–சென்னை ஆகிய மார்க்கங்களிலும் மாற்று வழித்தடங்கள் காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து வாகன ஓட்டுநர்களும் இதனை கடைப்பிடிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இதன் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!