சென்னையில் 4 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம்... குடியரசு தின விழா ஒத்திகை!
சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை மற்றும் விழா நாட்களாக நாளை ஜனவரி 19 (திங்கள்), 21 (புதன்), 23 (வெள்ளி) மற்றும் ஜனவரி 26 (திங்கள்) ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.
காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் தற்காலிகமாகச் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
அடையாறில் இருந்து பிராட்வே செல்பவர்களுக்கு:
கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, தேவநாதன் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக அண்ணா சாலை சென்று பிராட்வே அடையலாம். பிற வாகனங்கள் பேருந்துகள் உட்பட காந்தி சிலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை நோக்கித் திருப்பப்பட்டு, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு மற்றும் அண்ணா சாலை வழியாகப் பயணிக்கலாம்.
மயிலாப்பூர் மற்றும் இதர பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு:
மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை 1 பாயிண்டில் திரும்பி தங்கள் இலக்கை அடையலாம். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் நோக்கித் திருப்பி விடப்படும். பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாகத் திருப்பப்படும்.
பாரிமுனையிலிருந்து அடையாறு செல்பவர்களுக்கு:
ராஜாஜி சாலை வழியாக வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையைத் தவிர்க்க வேண்டும். வடக்கு துறைமுக சாலை, வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, ஜி.பி. ரோடு வழியாக ராயப்பேட்டை மணிக்கூண்டை அடைந்து, லாயிட்ஸ் சாலை மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக அடையாறு செல்லலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!