திருமணக் கொண்டாட்டத்தில் துயரம்... கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி!
ஹரியானா மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு உறவினர் ஒருவரின் திருமணத்திற்காகச் சென்ற நண்பர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 நண்பர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இவர்களது கார் நேற்று இட்டாக் மாவட்டம் சகித் அருகே கார் சென்றுக் கொண்டிருந்த போது இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அப்படியே தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிவம் (21), சுனில் (23), மன்கி (19) என்ற 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்:
காரில் இருந்த மற்ற இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது இட்டாக் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சகித் பகுதி போலீஸார், கிரேன் உதவியுடன் கால்வாயிலிருந்து காரை மீட்டனர்.
அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநர் கண் அயர்ந்திருக்கலாம் அல்லது பனிமூட்டம் காரணமாகச் சாலையோர மரம் தெரியாமல் மோதியிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்து அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!