தொடரும் சோகம்... மாயமான இந்திய இன்ஜினியர் பலி!
கடவுள் கண்ணயர்ந்த நேரத்தில் ஓங்கி உயர்ந்த கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, சாத்தான் சடுகுடு விளையாடிய துருக்கியில், நிலநடுக்கத்தின் போது காணாமல் போன இந்தியர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜய்குமார் என்பவர் மலாட்யா பகுதியில் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஹோட்டலின் இடிபாடுகளில் சிக்கி, விஜய்குமார் சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. விஜய்குமார் மரணமடைந்த செய்தி, அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், விஜய்குமாரை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் பயந்து போன அவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஜய்குமாரின் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை துருக்கி அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், துருக்கியின் மலாட்யா பகுதியில் உள்ள 4 நட்சத்திர ஓட்டலின் இடிபாடுக்குள் இருந்தவரை மீட்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் சிலர் உயிருடனும், பலர் சடலங்காகவும் மீட்கப்பட்டனர். அப்போது விஜய்குமாரின் சடலமும் மீட்கப்பட்டது. உடலும், முகமும் முழுவதுமாக சிதைந்து போன நிலையில், அவரது இடது கையில் போடப்பட்டிருந்த டாட்டூவை வைத்தே விஜய்குமாரை மீட்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து துருக்கி அரசுக்கு தெரியப்படுத்தினர். இதன்பேரில், மத்திய அரசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க