குன்னூரில் சோகம்... கிணறு வெட்டிய போது மண் சரிந்து 3 பேர் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர் சாரல் மழை காரணமாக, பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆழமான குழிக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, மேலிருந்த மண் திடீரெனச் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் 3 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கிப் புதையுண்டனர்.
இது குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரையும் மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர்கள் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நகர் மற்றும் காந்திபுரம் பகுதிகளில் இன்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் ராட்சத பாறைகளும் மண்ணும் விழுந்து போக்குவரத்து முடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் காட்டேரி மற்றும் பாலாடா வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!