நடுக்கடலில் சோகம்.. திருமண வீட்டார் சென்ற படகு கவிழ்ந்து 21 பேர் பலி !!

 

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியான துறைமுக நகரம் ஹொடைடா ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர்.

 அப்போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்ததில், பெண்கள், சிறுவர்கள் என படகில் பயணித்த 27 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடல் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில் கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக படகு கவிர்ந்து விபத்து ஏற்பட்டடிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும் விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு அந்நநாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!