தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்.. குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி !

 

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவந்தனர். இந்த நிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியையொட்டி 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர்.

அப்போது அர்ச்சகர் ஒருவர் திடீரென குளத்தில் ஆழமான பகுதியில் தவறுதலாக இறங்கி மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கினர். இதனால் குளத்தில் நின்ற மற்ற அர்ச்சகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்தனர்.

அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு அடுத்தடுத்து 5 அர்ச்சகர்களின் உடல்களை மீட்டனர். அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராகவன், லோகேஷ்வரன், பானேஷ், சூர்யா உள்பட உயிரிழந்த 5 பேரும் தன்னார்வலர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!