சுரங்கத்தில் ரயில் விபத்து… 65 பேர் படுகாயம்!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே, லோகோ ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதியதில் 65 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் சமோலி மாவட்டத்தில் பிபில்கோட்டி நீர்மின் திட்ட சுரங்கத்தில் நடந்தது. இந்த திட்டம் அலகண்டா ஆற்றில் ஹெலங் மற்றும் பிபில்கோட் பகுதிகளை இணைத்து 111 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் 4.5 கிலோமீட்டர் நீளத்தில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணிமாறுதலுக்காக லோகோ ரயிலில் ஊழியர்கள் வெளியேறினர். எதிரே அதே பாதையில் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டதால் இரு ரயில்களும் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நேரத்தில் ரயிலில் 109 பேர் இருந்தனர்.
இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 65 பேர் காயமடைந்தனர். 10 பேர் மோசமான காயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 4–5 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!