என்ன கொடுமை சரவணன் இது? ஓடும் ரயிலில்  துணி துவைத்து காயப்போட்ட அவலம். .. சர்ச்சை வீடியோ! 

 

 

இந்திய ரயில்களில் பயணம் என்பதே ஒரு தனி அனுபவம் என்றாலும் ஓடும் ரயிலின் பெட்டி திடீரென துணி துவைக்கும் துறையாக மாறிய வினோத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரயிலின் பொதுப்பெட்டி ஒன்றில் பயணிகளின் இருக்கைகளுக்கு மேலேயும் லக்கேஜ் வைக்கும் இடங்களிலும் லுங்கிகள் மற்றும் சட்டைகள் தோரணமாகக் கட்டப்பட்டுள்ளன. வீட்டின் பால்கனி போல காட்சியளிக்கும் அந்தப் பெட்டியில் நின்றுகொண்டு பயணம் செய்யும் பயணிகளின் தலைக்கு மேலேயே ஈரத்துணிகள் அசைந்தாடும் அவலநிலை அரங்கேறியுள்ளது.

அந்தப் பெட்டியில் அமர்ந்திருக்கும் மற்ற பயணிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதனை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்வது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை வறுமை அல்லது இட நெருக்கடியின் காரணமாகச் செய்திருக்கலாம் என்று ஆதரித்துப் பேசினாலும் ரயிலுக்குள் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் மக்களிடையே குறைந்து வருகிறதா என்ற கேள்வியுடன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!