undefined

 3 நாட்களுக்கு  மூர்மார்க்கெட்–சூலூர்பேட்டை இடையே இமு ரயில் சேவையில் மாற்றம்!

 
 

சென்னை ரயில்வே கோட்டத்தில் மூர்மார்க்கெட்–சூலூர்பேட்டை இடையேயான இமு ரயில் சேவையில் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூலூர்பேட்டை ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய பிப்.7, 10, 11 தேதிகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் பகுதியளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து பிப்.7 அன்று இரவு 8.25 மணிக்கு புறப்படும் இமு ரயில், சூலூர்பேட்டை வரை செல்லாமல் அதற்கு முன்பாக உள்ள தடா நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

அதேபோல் பிப்.10 மற்றும் 11 தேதிகளிலும் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் இமு ரயில் தடா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!