நாளை 13 ரயில் சேவைகளின் மாற்றம்... தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!
ஜோலார்பேட்டை மற்றும் தொட்டம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் மிக முக்கியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை (மார்ச் 24, செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை - கோவை மற்றும் அரக்கோணம் - சேலம் வழித்தடத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக நாளை அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பயணிகளின் விருப்பமான சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில், நாளை பிற்பகல் 2:15 மணிக்குக் கிளம்புவதற்குப் பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக மாலை 4:15 மணிக்குத்தான் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை - சென்னை விரைவு ரயிலும் 2 மணி நேரம் காலதாமதமாகவே இயக்கப்படும்.
தானியங்கி சிக்னல் பணிகளால் சில ரயில்கள் இடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும், மேலும் 3 ரயில்கள் மாற்றுப் பாதையிலும் திருப்பி விடப்பட உள்ளன. ரயில்களின் இந்தத் திடீர் மாற்றத்தால் நாளை பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், ரயில்வே உதவி எண் 139 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களின் ரயில்களின் நிலையை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும் மாற்றவே இந்தச் சிக்னல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்" என ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!