ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்: இன்று முதல் புதிய நிபந்தனைகள் அமல்!

 

இந்திய ரயில்வே, உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் இன்று ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதைக் குறைக்கவும், தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரத்து விதிமுறைகள்:

கட்டணம் திரும்பக் கிடைக்காது: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு ரூபாய் கூடத் திரும்பக் கிடைக்காது.

50% பிடித்தம்: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், செலுத்திய தொகையில் 50% மட்டுமே திரும்பப் பெற முடியும்.

25% பிடித்தம்: ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் சேர்த்து பயணக் கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும்.

முழு கட்டணம் திரும்பப் பெற: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே, தற்போதுள்ள நடைமுறைப்படி முழுத் தொகையையும் (ரத்து கட்டணம் நீங்கலாக) திரும்பப் பெற முடியும்.

 
விதிகள் கடுமையாக்கப்பட்டாலும், பயணிகளுக்கு ஒரு புதிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை பயணிகள் தாங்கள் ரயில் ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சார்ட்  தயாராவதற்கு முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது.

இந்த மாற்றங்கள் குறித்துத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், டிக்கெட் முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவதைத் தவிர்க்கவும் இந்த விதிகள் உதவும் என்று கூறியுள்ளார். எனவே, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!