மேட்டுப்பாளையம்–நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
மேட்டுப்பாளையம்–நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நெல்லையிலிருந்து குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் சென்றடையும். அதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு இரவு நேரத்தில் புறப்பட்டு காலை நேரத்தில் வந்து சேரும் வகையில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சேவை தொடர்ந்து நிரந்தரமாக மாற்றப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!