undefined

 வணிகக் கப்பலில் பயிற்சியாளர் மர்மமான முறையில் மாயம்... பெரும்  பரபரப்பு!

 
 

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) வணிகக் கப்பலில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசிய போது இயல்பாக இருந்தார் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் அறையில் சென்ற பின் அவர் மர்மமாக காணாமல் போய் விட்டார்.

காலை 8.30 மணியளவில் கப்பல் அதிகாரிகள் அறையில் அவர் இல்லாததை கவனித்தனர். இதையடுத்து கப்பலில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் காலை 9.40 மணியளவில் அவசர எச்சரிக்கை விடுத்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இப்போது மொரிஷியஸ் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!