கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் திடீர் இடமாற்றம்... தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக மாற்றம் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பல்வேறு பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் புதிய பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த. சினேகா பொறுப்பேற்கிறார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக சார் ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் உயர்வு பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் கு. ரவிகுமார், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!