தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும் ... திருச்சி சிவா!
பாராளுமன்றத்தில் 2வது கட்ட பட்ஜெட் அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப் படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக எம்பிக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு 2026 மறுசீரமைப்பு மறு வரைவு கொண்டு வருவதற்கு எல்லாம் முயற்சி எடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டி எடுத்து 31 தொகுதிகளாக குறைத்து விடும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் என்பது சட்டரீதியாக சரியாக இருக்கலாம் மத்திய அரசு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது ஆகவே மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தது.
இத்திட்டத்தை கொண்டு வந்தது ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாடு இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தியது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக்கூடிய செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும் ”என டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!