சூரியனுடன் செல்பி... த்ரிஷா – நயன்தாரா கிளிக்ஸ்!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்றும் முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவருகின்றனர்.
இறுதியாக த்ரிஷா நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வணிக ரீதியாக அவருக்கு பெரிய பின்னடைவு ஏற்படவில்லை. மறுபுறம் நயன்தாரா பான் இந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த ‘டாக்ஸிக்’, ‘மூக்குத்தி அம்மன் – 2’ படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இந்த நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த அரிய தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!