நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகல்...?
தமிழ் திரையுலகில் கடந்த இரு தசாப்தங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'லியோ' எனப் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்த திரிஷா, தற்போது 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி', 'தக் லைஃப்' மற்றும் சூர்யாவுடன் 'கருப்பு' போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கும் நிலையில், அவர் புதிய கதைகளைக் கேட்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
திரிஷாவின் இந்தத் திடீர் மௌனத்திற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் அவர் பங்கேற்றது முதல், சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய தனிப்பட்ட வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இந்தத் தேவையற்ற சர்ச்சைகளால் மனமுடைந்துள்ள திரிஷா, சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருக்கத் திட்டமிட்டுள்ளாரா? அல்லது தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ரகசியமாகத் திட்டமிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், அவர் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் பிஸியாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ, எப்போதுமே பிஸியாக இருக்கும் திரிஷா, கடந்த 90 நாட்களாகப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதது அவரது ரசிகர்களிடையே ஒருவித ஏமாற்றத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஒரு மாஸ் அப்டேட்டுடன் திரிஷா இந்த மௌனத்தை உடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!