undefined

ஐ.நா.வுக்கு பதில்  “போர்டு ஆப் பீஸ்”  … ரூ.9,000 கோடி கட்டணம் அறிவித்த டிரம்ப்

 

இஸ்ரேலுடனான போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த, ஐ.நா.வுக்கு மாற்றாக “போர்டு ஆப் பீஸ்” என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைய விரும்பும் நாடுகள் தலா ரூ.9,000 கோடி, அதாவது 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். இந்த அமைப்பு காஸா மறுசீரமைப்பு பணிகளை நேரடியாக மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 முதல் 2025 வரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்த போர் காஸாவை முற்றிலும் சிதைத்தது. டிரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 20 அம்ச அமைதித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பல அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்தன. கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதனை ஏற்றுக்கொண்டது.

புதிய அமைப்பின் தலைவராக டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜெராட் குஷ்னர், டோனி பிளேர், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் இணையுமாறு பிரதமர் மோடிக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அமைப்பு ஐ.நா.வுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட “குறுக்கு வழி” என ஐ.நா. அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!