undefined

கிரீன்லாந்தை கைப்பற்றினால்தான் உலகம் பாதுகாப்பு...  ட்ரம்ப்   சர்ச்சை பதிவு! 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என மீண்டும் கூறியுள்ளார். கிரீன்லாந்தின் மீது முழு கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே அவர் வெளியிட்ட கருத்துகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தை பாதுகாக்க டென்மார்க்குக்கு போதிய திறன் இல்லை என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். NATO அமைப்புக்கு இதுவரை அதிக உதவிகள் செய்தது அமெரிக்காதான் என்றும், இனி NATO அமெரிக்காவுக்காக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். கிரீன்லாந்துக்கு உரிமை இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் டென்மார்க்கிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நார்வே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பல போர்களை தடுத்து நிறுத்தியும் தனக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்படவில்லை என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த கருத்துகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா–ஐரோப்பா உறவுகளில் புதிய பிளவை உருவாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!