undefined

 ரஷ்யாவுடன் வர்த்தகம்   செய்கிற நாடுகளுக்கு 500% வரி...  ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை

 
 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்த வகை பொருளும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி விதிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் அதிக எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, சீனா, துருக்கி, பிரேசில் போன்ற நாடுகள் இந்த சட்டம் நிறைவேறினால் பெரிய பொருளாதார பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. “இந்தியா உட்பட ரஷ்யாவுடன் வியாபாரம் செய்கிற நாடுகள் கடுமையாக தண்டிக்கப்படும்,” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரித்து, உக்ரைன் போரை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா விளக்குகிறது. இதற்கான மசோதாவை செனட்டில் லிண்ட்சி கிராம், ரிச்சர்ட் பிளமென்தால் ஆகியோர் முன்வைத்துள்ளனர். 100 பேரில் 85 செனட்டர்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மசோதா விரைவில் நிறைவேறும் வாய்ப்பு அதிகம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்தியாவுக்கு ஏற்கனவே 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் அமல்பட்டால் அது 500% ஆக உயரும் நிலையில் உள்ளது.

இந்தியா தற்போது ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதை நிறுத்தினால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். மாற்றாக தொடர்ந்தால் அமெரிக்காவுடன் உள்ள வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்படும். இரு தரப்பிலும் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், செனட்டில் மசோதா நிறைவேறுவதற்கு முன்பே இந்திய அரசு துரிதமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!