உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்... ட்ரம்ப் வேண்டுகோள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரபலமான போண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். இது யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதல் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் தந்தை சஜித் அக்ரம் (50) போலீஸாரால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மகன் நவீத் அக்ரம் (24) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் கொடிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட தாக்குதல் என பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். கோமா நிலையிலிருந்து மீண்டுள்ள நவீத் அக்ரமிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யூத சமூகத்துக்கு இரங்கல் தெரிவித்து, இது பயங்கரமான யூத எதிர்ப்பு தாக்குதல் என கூறினார். உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரபல சுற்றுலா தலமான போண்டி கடற்கரையில் நடந்த இந்த தாக்குதல், உலகளவில் பயங்கரவாத அச்சம் இன்னும் நீடிப்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!