undefined

உக்ரைன் போர் முடிவுக்கு மிக அருகில் உள்ளோம்… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு! 

 

அமெரிக்க அதிபர்   டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ இல்லத்தில் சந்தித்து ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு, “போர் முடிவுக்கு இன்னும் சில வாரங்களில் தெளிவு கிடைக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பில் 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதில் 90 சதவீத அம்சங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார். பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கிட்டத்தட்ட முழுமையான ஒப்புதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் தயாராக இருப்பதாக டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார்.

ரஷ்யா–உக்ரைன் மோதல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான போர் என டிரம்ப் குறிப்பிட்டார். டான்பாஸ் பகுதி எதிர்காலம் உள்ளிட்ட சில கடினமான விஷயங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், “இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம்” என்ற அவரது வார்த்தைகள் உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!