நான் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்… டிரம்ப் மீண்டும் அதிரடி பேச்சு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இதே கருத்தை அவர் பல்வேறு மேடைகளில் இதுவரை சுமார் 80 முறை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரி விதிப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தியதாகவும், இல்லையெனில் அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க வணிக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், உலகம் முழுவதும் இதுவரை 8 போர்களை தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்தார். இதில் 6 போர்கள் வரி விதிப்பு மூலம் முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார். மக்கள் உயிரிழப்பதை பார்க்க முடியாததால் கடுமையான பொருளாதார அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார். இந்தியா-பாகிஸ்தான் போரில் சுமார் 10 விமானங்கள் தகர்க்கப்பட்டதாகவும், இந்த போரைக் கட்டுப்படுத்தியதால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா மே 7ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவங்களுக்குப் பிறகே போர் நிலை உருவானதாக கூறப்படுகிறது. ஆனால் போர் நிறுத்தத்தில் எந்த வெளிநாட்டு தலையீடும் இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!