அமெரிக்கர்களே , இஸ்ரேலை விட்டு வெளியேறுங்க... அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல் !
ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் குறிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்து, இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ட்ரோன் மூலம் குறிவைத்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நேரத்தில் தூதரகம் காலியாக இருந்ததால் உயிரிழப்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குவைத் உள்ளிட்ட பகுதிகளிலும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் முயற்சிகள் நடந்ததாக தகவல். ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் Alaeddin Boroujerdi, “இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் குறிவைப்போம்” என்று எச்சரித்துள்ளார். இதற்கிடையில், ஈரான் ஏவுகணை Petah Tikva நகரை தாக்கியதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. சேதம் ஏற்பட்டாலும் உயிரிழப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் Mike Huckabee, டெல் அவிவில் உள்ள Ben Gurion Airport திறப்பு நிலை தெளிவில்லை என்றும், வெளியேற விரும்புவோர் Sinai Peninsula வழியாக செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார் நாடுகளில் அவசர பணியில் இல்லாத அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, Iranian Red Crescent Society வெளியிட்ட தகவலின்படி, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் 787 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!