undefined

ராஜஸ்தானில் ஆடம்பர நட்சத்திர திருமண விழாவில் பங்கேற்கும் ட்ரம்ப் மகன்.. பாலிவுட் பிரபலங்களும் குவிகிறார்கள்!

 

அமெரிக்க வாழ் இந்தியத் தொழிலதிபரின் மகள் திருமணம், இந்தியாவின் பூர்வீகப் பகுதியான ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் ஆடம்பரமாக நடைபெறுகிறது. இந்தத் திருமண விழாவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப், பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால், உதய்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்கத் தொழில் அதிபர் ராஜூ ராமலிங்கம். இவரது மகள் நேத்ரா மந்தேனாவுக்கும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணத்தை, பாரம்பரிய இந்திய முறைப்படியும், அதே சமயம் உலகத் தரத்திலான ஆடம்பரத்துடனும் நடத்த, ஏரிகளின் நகரம் எனப் புகழப்படும் ராஜஸ்தானின் உதய்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் (நவம்பர் 20) தொடங்கியது. திருமண விழா நிகழ்ச்சிகள் வரும் 24-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இந்தத் திருமண விழாவிற்காக, உதய்பூரில் உள்ள ஒரு மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டல் தேர்வு செய்யப்பட்டு, அது முழுவதுமாக ஓர் அரண்மனை போல ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வண்ணமயமான விளக்குகள், பாரம்பரிய கலை வேலைப்பாடுகள் மற்றும் பிரம்மாண்ட செட் அமைப்புகள் ஆகியவை ராஜஸ்தானிய கலாச்சாரத்தையும், நவீன ஆடம்பரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்குத் தடபுடலான விருந்துகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திருமண விழாவிற்கு சுமார் 600 முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப்பும் அவரது குடும்பத்தினருடன் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலிவுட் பிரபலங்களான நடிகர் ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், மற்றும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் கூடுவதால், திருமண மண்டபம் மற்றும் ஹோட்டலைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!