இந்தியர்களை குறிவைக்கும் ட்ரம்ப்… அமெரிக்காவில் மேலும் 30 பேர் கைது!
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இந்தியா மீது கடுமையான போக்கை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கம் இதுவரை சட்டவிரோதமாக தங்கியிருந்த 350 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. எச்-1பி விசா கட்டணம் ரூ.90 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியர்களின் அமெரிக்க கனவு கேள்விக்குறியானது.
சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்த அமெரிக்காவில் ‘ஐஸ்’ என்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் மூலம் கலிபோர்னியா மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 30 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த அவர்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் டாக்சிகளை அந்த நாட்டின் ஓட்டுனர் உரிமம் பெற்று இயக்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் சிறையில் அடைத்து அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!