undefined

“ஓபிஎஸ் பசுத்தோல் போர்த்திய புலி” - டிடிவி தினகரன் ஆவேசம்!

 

அரசியலில் நிலைத்திருக்க ஓபிஎஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம், ஆனால் சட்டமன்றத்தில் அவரது ஆதரவாளர் பேசியது கண்டிக்கத்தக்கது எனத் தினகரன் தெரிவித்துள்ளார்.

"ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியது, கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளது" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்துத்தான் எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கினார். அப்படிப்பட்ட நிலையில், திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் தரப்பு பேசுவது வக்கிரமான மனநிலை என்று அவர் சாடினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமமுகவுக்கு பாஜக மூலமாகவே தொகுதிப் பங்கீடு நடைபெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தாங்கள் அங்கம் வகிப்பதாகவும், இந்தக் கூட்டணி திமுகவை வீழ்த்தப் போதுமான பலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் நல்லாட்சியால்தான் இந்தியா உலக நாடுகளுக்குப் போட்டியாக வளர்ந்து வருவதாகப் பாராட்டிய அவர், டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் நடத்திய போராட்டம் கீழ்த்தரமானது என்றார். "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக" காங்கிரஸ் மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பட்டிதொட்டியெங்கும் கஞ்சா பழக்கம் கரைபுரண்டு ஓடுவதாகவும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!