"கிட்ட நெருங்கவே முடியலப்பா.." மாடுபிடி வீரர்களைத் தெறிக்கவிட்ட டிடிவி தினகரன் காளை!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானமே அதிரும் வகையில், டி.டி.வி. தினகரனின் காளை இன்று வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தது. அந்தக் காளையின் வேகத்தைக் கண்டு வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய காட்சி வைரலாகி வருகிறது.
அவனியாபுரத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரிசையாகக் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், டி.டி.வி. தினகரனுக்குச் சொந்தமான காளை வாடிவாசல் அருகே வந்தது.
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த நொடியில், அந்தக் காளை மின்னல் வேகத்தில் மைதானத்தைச் சுற்றத் தொடங்கியது. "ஏ.. என்னப்பா இப்படித் தெறிச்சு ஓடுறீங்க?" என்று பார்வையாளர்கள் ஆச்சரியப்படும் வகையில், காளையின் திமிலைப் பிடிக்க முயன்ற வீரர்கள் அதன் ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கண்டு ஒதுங்கி நின்றனர். ஒரு சில வீரர்கள் காளையை நெருங்க முயன்ற போதும், தனது கொம்புகளால் சுழற்றி அடித்து அவர்களைப் பின்வாங்கச் செய்தது அந்தக் காளை.
யாராலும் அடக்க முடியாமல் சீறிப் பாய்ந்த டி.டி.வி. தினகரனின் காளை, வெற்றிகரமாக எல்லையைத் தொட்டது. பிடிபடாத அந்தக் காளைக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தக் காளையின் ஆட்டத்தை மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!