விஜய் தலைமையிலான கூட்டணி தமிழக அரசியல் கணக்கை மாற்றும்... டிடிவி தினகரன்!
2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் சூழலை மாற்றும் கருத்தை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்வைத்தார். விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது NDA-வை மூன்றாம் இடத்திற்கு தள்ளும் என்றார். இது எடப்பாடி பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லியதல்ல, யதார்த்தம் எனவும் விளக்கினார்.
திருப்பூர் தெற்குத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார். திமுக ஆட்சியின் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேறவில்லை என்றார். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி திமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது என்றார்.
திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினார். தவெக தலைமையிலான கூட்டணி வலுவான மாற்றாக அமையும் என்றார். விஜய் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பாராட்டினார். அமமுக தன்னை முதலில் பலப்படுத்தி தவிர்க்க முடியாத சக்தியாக வளரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!