பாஜக அழுத்தம் பலிக்காது... கொள்கை கூட்டணியே முடிவு – தினகரன் அதிரடி
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முடிவு அறிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் வலியுறுத்தினார்.
தவெகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் விஜய்க்காக உயிரையும் விடுவேன் என கூறியது குறித்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த சூழலில் கிடைத்த அங்கீகாரத்தை பெருமையாக வெளிப்படுத்தியதாக தான் பார்ப்பதாக தினகரன் கூறினார். அதே நேரத்தில், முசிறியில் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனை அறிமுகம் செய்து வைத்த அவர், 50 அல்லது 80 இடங்கள் வேண்டும் என நிர்பந்தம் செய்ய மாட்டோம் என்றும், கூட்டணி தர்மத்தை புரிந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
8 ஆண்டுகளில் அமமுக வளர்ச்சி 50 முதல் 75 ஆண்டுகள் பழமையான கட்சிகளை விட சிறப்பானது என பெருமிதம் தெரிவித்த தினகரன், 200 தொகுதிகளில் கட்சி வலிமையாக இருப்பதாக கூறினார். வரும் ஆட்சியில் அமமுக நிச்சயம் பங்கு பெறும் என்றும், தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் உறுதியளித்தார். கூட்டணி இன்னும் உறுதி ஆகாத நிலையில் வேட்பாளர் அறிவிப்பு வெளியானது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!