“திமுக ஆட்சிக்கு முடிவின் தொடக்கம் இதுதான்” – மதுராந்தகத்தில் அன்புமணி அதிரடி!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகப் பேசினார். திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம் என கூறிய அவர், திமுக என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் அரசு என்று விமர்சித்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி, கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் அனைத்தும் பூஜ்ஜியம் என அவர் சாடினார். புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ சீட்டுகள், பேராசிரியர் நியமனங்கள், மின்திட்டங்கள் என எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை என்றார். ஆனால் ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதலிடத்தில் திமுக உள்ளது என்றும், முதல்வர் ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய் பேசுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வருமுன் 505 வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அதில் 66 மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி கூறினார். நீட் ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் ரத்து, 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என விமர்சித்தார். பொய் வாக்குறுதிகளால் தமிழகத்தை நரகமாக மாற்றிய திமுகவை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!