“சும்மா டயலாக் பேசாதீங்க…” விஜய்க்கு தினகரன் கடும் பதிலடி!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். “சும்மா டயலாக் பேசிக்கிட்டு இருக்கார். தேவையில்லாம எங்கிட்ட வந்து ஏன் உரசணும்?” என்று ஆவேசமாக பேசினார். “நாங்களெல்லாம் வெகுண்டு எழுந்தால் தப்பாகிடும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
விஜய் பேசிய அதே டயலாக்கை சுட்டிக்காட்டிய தினகரன், “பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிப்பாரா?” என கேள்வி எழுப்பினார். இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடு அதிகரித்து வருகிறது.
கூட்டணி ஆட்சி குறித்து பேசிய தினகரன், “அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது ஆசை மட்டுமே. எந்த நிபந்தனையும் இல்லை” என்றார். தவெகவுடன் கூட்டணி விவகாரம் குறித்தும் விளக்கம் அளித்த அவர், NDAவில் இணைந்தது தனது சொந்த முடிவு என தெரிவித்தார். விஜய்யுடன் ஏற்பட்ட மோதலும், கூட்டணி பேச்சுகளும் தமிழக அரசியலை மேலும் சூடேற்றியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!