undefined

விஜய் எங்களது எதிரி அல்ல... டிடிவி தினகரன் பளிச்! 

 
 

சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்று கூறினார். திமுகவை வீழ்த்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் திமுகவை வீழ்த்தும் பணியை கவனிக்கட்டும் என்றும், விஜய் எங்களுடைய எதிரி அல்ல, எங்களுடைய ஒரே எதிரி திமுகதான் என்றும் தினகரன் கூறினார். அதிமுக தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று சொல்லிக் கொண்டே, அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் பிரிந்திருந்ததால் கடந்த முறை தோல்வியடைந்தோம் என்றும், அதை உணர்ந்ததால் இந்த முறை ஒன்றிணைந்துள்ளதாக தினகரன் கூறினார். ஓபிஎஸ் தனது அண்ணன் என்றும், சிலர் கட்சி விட்டு சென்றது வருத்தம் அளித்தாலும் தனிநபர்கள் ஒரு இயக்கத்தை பாதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். எவ்வளவு குழப்பம் விளைவிக்க முயன்றாலும் இந்த இணைப்பு கலைவதில்லை என்றும் அவர் உறுதியாக கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!