காவலர் கையை கடித்த தவெக தொண்டர்... நள்ளிரவில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் நால்வர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (டிசம்பர் 7) மாலை பாலக்கோடு அருகே செயல்பட்டு வந்த தனியார் மதுபான பாரை உடனடியாக மூட வலியுறுத்தி தவெகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தவெக மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை போலீசார் அவர்களது வீடுகளுக்குச் சென்று மீண்டும் கைது செய்துள்ளனர். போராட்டத்தின் போது காவலரின் கையை கடித்தல், அரசுப் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள் நலனுக்காக மதுபான பாருக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்தினோம். தேவையற்ற போலீஸ் அடக்குமுறையும், நள்ளிரவு கைது நடவடிக்கையும் ஜனநாயக விரோதமானது” என தவெக மாவட்ட நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மதுபான பார்கள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தவெக தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!