தவெக கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கவும் தயார்... விஜய் சூசகம்!
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தலைவர் விஜய், அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மற்றவர்களுக்கு வாக்குச் சாவடி என்றால் கள்ள ஓட்டு போடும் இடம்; தவெகவுக்கு அது ஜனநாயகக் கூடம் என்றார். ஒவ்வொரு ஓட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கட்சியைத் தாண்டியும் மக்கள் விஜயுடன் நிற்க தயாராகிவிட்டதாக அவர் கூறினார். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைக்க கட்சியினர் முழு உழைப்பையும் காட்ட வேண்டும் என்றார். தீய சக்தியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். விஜய் பிடித்திருந்தால் அதை வார்த்தையில் அல்ல, உழைப்பில் காட்டுங்கள் என உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து ஒரு உண்மைக் கதையை நினைவுபடுத்திய அவர், நாட்டை இழந்த நிலையிலும் போராடி மீட்டெடுத்த ராணி வேலுநாச்சியாரை எடுத்துக்காட்டினார். சின்ன மருது, பெரிய மருது, சையது கார்கி ஆகியோரின் நட்பு சக்தியுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து வென்றார் என்றார். நட்பு சக்தி இருந்தாலும் இல்லையெனினும், தனியாக நின்று வெல்லும் அளவுக்கு தவெகவிடம் பெரிய படை உள்ளது என கூறி, கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கும் தயார் இருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!