பிப்ரவரி 2ம் வாரம் வேலூரில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வேலூரில் அடுத்த பெரும் பிரச்சாரத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வேலூரில் பிரச்சாரம் நடத்த தேவையான அனுமதிகளை பெறும் பணிகளை தவெக தொடங்கியுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய் தீவிர அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் கவனம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக வேலூர் பிரச்சாரம் வட மண்டல அரசியலில் தவெகவின் அடுத்த முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் மூலம் வட மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதே இலக்காக உள்ளது. புதிய தொண்டர்களை இணைப்பது, கட்சி அமைப்பை வலுப்படுத்துவது ஆகிய பணிகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தேதி, இடம், பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!