பிப்ரவரி 6 முதல் தவெக 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு !
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் இந்த விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக தேர்தலை தனித்து சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த விருப்ப மனு பெறும் நடைமுறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் மனுக்கள் பெறப்படுவதால், போட்டியிட விரும்பும் பலர் தலைமையகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதனால் கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது.
விண்ணப்பதாரர்களின் தகுதி, கட்சி மீது உள்ள அர்ப்பணிப்பு, மக்களிடையே செல்வாக்கு மற்றும் சமூக பணிகளில் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விருப்ப மனு பெறும் பணி முடிந்த பின் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!