undefined

 ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடை... தவெக நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடு! 

 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க தமிழக வெற்றிக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கட்சியின் சார்பில் ஊடகங்களில் பேசுவது குறித்து தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது சமூக வலைதளப் பதிவில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழகத்தின் முன்அனுமதி இல்லாமல் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள், சமூக ஊடக பேட்டிகள் அனைத்துக்கும் முன்பாக அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்அனுமதி இல்லாமல் மாநில அல்லது தேசிய அளவிலான எந்த ஊடக தளத்திலும் கருத்து தெரிவிக்க கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் சூழலில் ஒற்றுமையை காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!