undefined

இந்த விஜய்யை முடக்கலாம்… வீடு தோறும் இருக்கும் விஜய்யை முடியாது!... பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர்  ஆவேசம்! 

 

 

விஜய் தஞ்சாவூரில் முதன்முறையாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். கரூரில் தொடங்கி ஜனநாயகன் வரை தம்மீது பழி சுமத்தப்பட்டதாக கூறினார்.

பலர் ஆதரவாக குரல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். முதல்வரும் வெளிப்படையாக அல்லாமல் கருத்து தெரிவித்ததாக விமர்சித்தார். தற்போது தம்மால் ஆட்சியினர் அமைதியாக இருக்க முடியவில்லை என்றார். மக்கள் சக்தி எழுந்ததால் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டதாகவும் கூறினார்.

ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக ஐயாயிரம் கொடுத்தாலும் மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றார். கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். இந்த விஜய்யை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜய்யை முடியாது என்றார். மக்கள் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும், சிலை போன்றவை பின்னர் பார்க்கலாம் என்றும் வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!