5,00,000 வரை கல்விக்கடன்... பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ரூ15000 உதவித் தொகை... விஜய் அதிரடி அறிவிப்புகள்!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று பெண்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், சிங்கப் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் குட்டிக் கதையுடன் தனது உரையைத் தொடங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தனித் துறை உருவாக்கப்படும் என்றும், அது தனது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மாநிலத்தில் 60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசு பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்படும் என்றார். அதோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என்றும், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டு சேலை வழங்கும் “அண்ணன் சீர்” திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மாணவர்கள் கல்வியை தொடர தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்றும், பெண்கள் அனைத்து பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பெண்கள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் பல குழுக்கள் செயல்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், சுய உதவி குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!