தவெக தலைவர் விஜய்க்கு ரோடுஷோ நடத்த அனுமதி மறுப்பு... காவல்துறை கிடுக்கிப்பிடி நிபந்தனைகள்!  

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பரப்புரை செய்ய அவருக்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கைக் கருத்தில் கொண்டு பல்வேறு கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

குறிப்பாக, விஜய் தனது வாகனத்தில் ஊர்வலமாகச் செல்லும் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பரப்புரையின் போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்று பேச வேண்டும் என்றும், தொண்டர்கள் வாகனங்களை அணிவகுத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

தவெக தலைவர் முதல்முறையாக நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், திருச்சியில் அவர் மேற்கொள்ளும் இந்த முதல் கட்ட பரப்புரை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் அக்கட்சியின் தொண்டர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி விதிகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!