விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்... புதுச்சேரியில் பரபரப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளச் சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தார். புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சில தொண்டர்கள், விஜய் அமர்ந்திருந்த காரின் முன் பகுதி (பானட்) மீது ஏறி நின்றதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
தலைவரைப் பார்த்த உற்சாகத்தில் பூக்களைத் தூவி வரவேற்ற ரசிகர்கள், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து காரைச் சூழ்ந்து கொண்டனர். காரின் மேல் ஏறி நின்று கைபேசி மூலம் விஜய்யைப் புகைப்படம் எடுக்க முயன்றதால் வாகனத்தைச் செலுத்த முடியாமல் ஓட்டுநர் திணறினார். இந்தத் திடீர் செயலால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாகத் தலையிட்டு காரின் மேல் ஏறியவர்களைக் கீழே இறக்கிவிட்டு கூட்டத்தை முறைப்படுத்தினர்.
தொண்டர்களின் இந்த அதிரடிச் செயலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. தனது காரைச் சூழ்ந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கைகாட்டிய விஜய், அவர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். பரப்புரை பயணத்தின் தொடக்கத்திலேயே இவ்வளவு பெரிய கூட்டமும், நெரிசலும் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!